விவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி பழையய மாவட்ட செயலக வளாகத்தில் விவசாய அமைச்சின் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபை அலுவலகம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
குறிதத் வளாகத்தில் அமைந்துள்ள கைத்தொழில் அபிவிருத்தி சபை அமைந்திருந்த கட்டட தொகுதியில் குறித்த அலுவலகம் இன்று விவசாய அமைசசர் மகின்த அமரவீர அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது,
இந்நிகழ்வில் விவசாய அமைச்சர் மகின்த அமரவீர, பிரதி அமைச்சர்களான அங்கயன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் உத்தியோகபூர்வ ஏட்டில் பதிவு செய்தார்.
தொடர்ந்து குறித்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர்,
குறிதத் காப்புறுதி அலுவலகம் பிரதி அமைச்சர் அங்கயன் அவர்களின் வேண்டுகையின் பெயரில் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
விவசாய செய்கை தொடர்பில் எமது ஜனாதிபதி அவர்களின் எண்ணத்திற்கமைய மானிய உரத்துடன் விவசாய காப்புறுதியை வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய இதுவரை தெரிவு செய்யப்பட்ட விவசாய உற்பத்திகளுடன் மிளகாய், வெங்காயம், சோயா உள்ளிட்ட மேலும் பல விவசாய உற்பத்திகளிற்கு இலவச காப்புறுதி வழங்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது போன்று நாம் வடக்கில் பல விவசாய வலயங்களை உருவாக்குகின்றோம். கயூ, கச்சான், உழுந்து என பல்வேறு வலயங்களை உருவாக்கி விவசாயத்தை மேம்படுத்த உள்ளுாம்.
அதற்காக குறித்த வேலைத்திட்டத்தை தற்போது அறிமுகம் செய்வதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
நிகழ்வில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அங்கயன் இராமநாதன் குறிப்பிடுகையில்,
எனது வேண்டுகைக்கமைய விவசாயிகளின் நலனிற்காக இந்த காப்புறுதி அலுவலகத்தினை இன்று கிளிநொச்சியில் திறந்து வைத்துள்ளார்.
அந்த வகையில் கிளிநொச்சி விவசாயிகள் தமது விவசாய உற்பத்திகளை அச்சமின்றி தொடர முடியும்.
இதுவரை 6 விவசாய உற்பத்திகளிற்கே காப்புறுதி வழங்கப்பட்டது. தற்போது அரசாங்கத்தினால் மேலும் மிளகாய், வெங்காயம், சோளன், கச்சான், சோயா உள்ளிட்ட மேலும் காப்புறுதிகள் வழங்கப்படவுள்ளன எனவும்அவர் இதன்போது குறிப்பிட்டார்.
குறித்த அலுவலகத்தில் விவசாயிகள் தமது விவசாய உற்பத்திக்கான இலவச காப்புறுதியினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.