உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்!

உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த வைத்தியர்கள்!

உயிருடன் இருக்கும் ஒருவரை, மருத்துவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கான்பூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை பூஹ்ல் சிங் என்ற 55 வயதுடைய ஒருவர் விபத்தில் சிக்கியிருந்தார்.

விபத்தில் படுகாயமடைந்தவரை மீட்டு, கான்பூரிலுள்ள ராம சிவ் வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதித்திருந்தனர்.

அப்போது, அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், அன்று மாலை 4 மணியளவில் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்காக பிணவறைக்குக் கொண்டு சென்றனர்.

அந்த சமயத்தில், இறந்ததாக அறிவிக்கப்பட்ட பூஹ்ல் சிங்கிற்கு சுவாசம் இருப்பதை பார்த்து, அவரின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர், வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அவருக்கு, மருத்துவர்கள் மீண்டும் சிகிச்சை வழங்கியிருந்தனர்.

இருப்பினும், சில மணி நேரத்தின் பின்னர் அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், உயிருடன் இருப்பவரை இறந்ததாக அறிவித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கும்படி, இறந்தவரின் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net