கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் போராட்டம்.

கிளிநொச்சியில் 618 ஆவது நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு இன்னமும் தீர்வு கிடைக்கவில்லை எனக் தெரிவித்து கிளிநொச்சி வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள அவர்களது அலுவலக முன்றலில் இன்று 30-10-2018 காலை பத்து மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சர்வதேசமே கண்மூடி தூங்குகின்றாயா ? OMP மீது எமக்கு நம்பிக்கையில்லை, சர்வதேசமே எமது உறவுகளை மீட்டுத்தா , OMP யை எங்கள் மீது திணிக்காதே என்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளுடனும் கோஷங்களுடனும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

இக் கவனயீர்ப்புப் போராட்டம் சுமார் ஒரு மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த போராட்டம் இடம்பெற்றது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net