கல்முனையில் கடலுக்குள் வெள்ளநீர் வெட்டி விடப்பட்டது!

கல்முனையில் கடலுக்குள் வெள்ளநீர் வெட்டி விடப்பட்டது!

அம்பாறை – கல்முனை பகுதியில் பெய்து வரும் அடை மழை காரணமாக முதலாம், இரண்டாம், மூன்றாம் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கி தாழும்நிலையில் காணப்படுகின்றது.

குறித்த பகுதியை சென்று பார்வையிட்ட கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் உடனடியாக மாநகரசபை ஆணையாளர் அன்சாருடன் தொடர்பு கொண்டு வெள்ளநீரை அகற்ற வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறினார்.

அதனையடுத்து ஆணையாளர் உடனடியாக இன்று ஜேசிபி இயந்திரத்தை உரிய இடத்திற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதன் பின்னர் உறுப்பினர் ராஜன் ஜேசிபி வாகனத்தின் உதவியுடன் மூன்று இடங்களில் வெட்டி வெள்ளநீரை கடலுக்குள் செலுத்த வகை செய்தார்.

அவருடன் இணைந்து இளைஞர்களும் ஒத்துழைத்ததன் பேரில் மேற்படி மூன்று பிரிவுகளும் வெள்ளநீரிலிருந்து தப்பித்தது.

வெள்ள நீரை வெளியேற்றுவதற்கு உதவியாக களத்தில் நின்று சேவைசெய்தமைக்கு உறுப்பினர் ராஜனுக்கு மக்கள் நன்றி தெரிவித்திருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net