பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய எழுத்தாளர் கைது
பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டிய சந்தேகத்தின் பேரில் எழுத்தாளர் வரவரராவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எழுத்தாளர் வரவரரா, தன் மீதான வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரி, புனே நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் அம்மனு மீதான வழக்கை நேற்று (சனிக்கிழமை) விசாரணை செய்த புனே நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
அதனைத் தொடர்ந்து ஐதராபாத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த வரவரராவை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் புனேவிலுள்ள செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.
பிரதமர் மோடியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை மற்றும் மகாராஷ்டிராவின் பீமா கோரே காலில் நடந்த சாதி வன்முறை சம்பவம் ஆகியவை தொடர்பில் வரவரராவுடன் சேர்ந்து 5 பேரை மகாராஷ்டிரா பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.