கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு!

கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர்.

அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் அனர்த்தம் ஏற்பட்டு பல்வேறு வகையில் இழப்புகளை சந்தித்துள்ள தம்மை இதுவரையில் தமிழக அரச அதிகாரிகள் எவரும் வந்து சந்திக்கவில்லை எனவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆகவே இவ்விடயம் தொடர்பில் தமிழக அரசு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Copyright © 3109 Mukadu · All rights reserved · designed by Speed IT net