வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய்!

வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய் – குரங்கின் பாசம்!

வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

குருசேப்பன்குளம், கிராமத்தில் அபூர்வமான நட்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது,

இந்த நட்பு தொடர்பில் தகவல் கிடைத்தவுடன் மக்கள் அதனை பார்வையிட கூட்டம் கூட்டமாக சென்று வருகின்றனர்.

குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் செல்லப்பிராணியாக போரா என்ற பெயரில் நாய் ஒன்று வளர்க்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அருகில் உள்ள காட்டில் வழி தெரியாமல் இருந்த குரங்குக்குட்டி ஒன்றை குறித்த உரிமையாளர் வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார்.

பொதுவாக நாய் மற்றும் குரங்கள் எதிரிகள் என்பதனால் முதலில் குரங்கை கூடொன்றில் அடைப்பதற்கு வீட்டு உரிமையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இவ்வாறான நிலையில் யாருக்கும் தெரியாமல் கூட்டில் இருந்து வெளியே வந்த குரங்கு நாயுடன் விளையாட ஆரம்பித்துள்ளது.

அன்று முதல் இந்த நாய் மற்றும் குரங்கிற்கு இடையில் நம்ப முடியாத நட்புறவு ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாய்க்கு போரா என்ற பெயர் வைக்கப்பபட்டமையினால் குரங்கிற்கு கண்ணன் என பெயரிடப்பட்டுள்ளது.

போரா என அழைத்தால் இரண்டுமே ஒன்றாக தான் வரும். போராவின் மீது ஏறியே கண்ணன் வருவான். ஒன்றாக சாப்பிட்டு, இருவரும் ஒன்றாகவே உறங்குகின்றனர். இந்த உறவு அந்த பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net