யாழில் மதிய உணவு உட்கொண்டு விட்டு உறங்கியவர் மாலையில் சடலமாக மீட்பு!

யாழில் மதிய உணவு உட்கொண்டு விட்டு உறங்கியவர் மாலையில் சடலமாக மீட்பு!

யாழில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறங்கிய நபர் மாலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ். 3ஆம் குறுக்கு தெருவைச் சேர்ந்த 25 வயதுடைய தர்மசேகரம் வசீகரன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றைய தினம் வீட்டில் மதிய உணவு உட்கொண்ட பின்னர் உறக்கத்திற்கு சென்ற நிலையில் மாலை தேநீர் வழங்குவதற்காக வீட்டில் இருந்தவர்கள் அவரை எழுப்பிய வேளை அசைவற்று கிடந்துள்ளார்.

அதனை அடுத்து வீட்டார் அவரை யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும், திடீரென படுக்கையில் வலிப்பு நோய் ஏற்பட்டதால், சுவாச பைக்குள் உணவு பதார்த்தம் அடைத்ததால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த உயிரிழப்பு தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிரேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net