தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புதொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்தில் பழைய ஊற்றுப்புலம் பழைய குடியிருப்பு

கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் ஊற்றுப்புலம் பழைய குடியிருப்புக்கான பிரதான பாதை துண்டிக்கப்படும் ஆபத்தில் காணப்படுகிறது.

இந்தப் பிரதேசத்திற்கும் மாவட்டத்திற்குமான ஒரேயொரு பாதையான காணப்படும் ஊற்றுப்புலம் பிரதான பாதையின் இரண்டு பாலத்திற்கு இடைப்பட்ட பகுதி நீரினால் அரிக்கப்பட்டு நீரில் மூழ்கும் ஆபத்தில் காணப்படுகிறது.

புதுமுறிப்பு குளம் புனரமைக்கப்பட்டு உயர்த்தப்பட்டு நீர் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டநிலையில் குளத்தின் பின்பகுதியான ஊற்றுப்புலம் பிரதேசத்தில் நீர் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நீரேந்து பகுதியை ஊடறுத்து பழைய குடியிருப்புக்கான பாதை உள்ளது.

இந்தப் பாதையிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பாதை துண்டிக்கப்படும் பட்சத்தில் ஊற்றுப்புலம் கிராமத்தின் பழைய குடியிருப்பில் வாழும் நூற்றுக்கணக்கான மக்கள் மாவட்டத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்படும் ஆபத்து ஏற்படும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே உடனடியாக உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் பொது மக்கள் அவரச வேண்டுகோள் விடுத்துள்ளனர்.Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net