முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்.
மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் நேற்று பிற்பகல் காலமானார் என்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு மெதடிஷ் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபராக செயற்பட்ட அவர், சிறந்த கல்விமானாகவும் விளங்கினார். நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட்டு அந்த மக்களுக்கான சேவையினையும் அவர் செய்துவந்தவர்.
கல்லூரி அதிபராக நாடாளுமன்ற உறுப்பினராக கல்விமானாக செயற்பட்ட அவர் மூப்பின் காரணமாக உயிரிழந்துள்ளார் என தெரிகிறது.
மட்டக்களப்பில் அவரின் சேவைகள் மகத்தானவை என அவரை நேசிக்கும் உறவுகள் தெரிவித்துள்ளதுடன் மட்டக்களப்பின் கல்வி வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த சேவைகளை செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அவரின் இறுதிக் கிரியைகள மட்டக்களப்பில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.