மன்னார் மனித புதைகுழி அகழ்வுப்பணி இடைநிறுத்தம்!
மன்னார் மனிதப் புதைகுழி அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்டவைத்திய அதிகாரி கடமையின் நிமித்தம் கொழும்பு சென்றுள்ளமையினால் மேற்படி அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இவ்வகழ்வுப் பணிகள் மீண்டும் எதிர்வரும் திங்கட்கிழமை சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த புதைகுழியில் இருந்து இதுவரை 21 சிறுவர்களின் எலும்புக்கூடுகள் உட்பட மொத்தம் 276 முழு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவற்றில் 269 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், அகழ்வு பணிகளின்போது எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் ‘காபன்’ பரிசோதனைக்காக எதிர்வரும் ஜனவரி மாதம் அமெரிக்காவின் புளோரிடாவுக்கு அனுப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.