தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது!

தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்பு தட்டிக்கழிக்கப்படுகிறது!

தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்ப்பு ஆணைக்குழுக்களினால் தட்டிக்கழிக்கப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசாரணை ஆணைக்குழுக்கள் திருத்தச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதற்போது மேலும் தெரிவித்த அவர்,

”ஆணைக்குழுக்களால் நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கையுடன் சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். அதன்படி இன, மொழி பாகுபாடின்றி பெரும்பான்மையினருடன் கைகோர்த்து பயணிக்கவும் சிறுபான்மையினர் காத்திருக்கின்றனர்.

ஆனால், போலி காரணங்களை முன்னிறுத்தி மறைமுகமாக மேற்கொள்ளப்படும் பாகுபாடுகள் வேதனையளிக்கின்றன.

சிறுபான்மையினர் கௌரவமாக வாழ்வதற்கு வழிவகுக்கின்ற கல்வி, வேலைவாய்ப்பு விடயத்தில் அநீதி இழைக்கப்படுகிறது.

தொழில்வாய்ப்புக்கான பரீட்சைகளில் இன விகிதாசாரப்படி தமிழர்கள் அதிகளவு சித்தியடைந்த பரீட்சைகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டு, நேர்முக பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறு வெளியாகி 7 மாதங்கள் கடந்த நிலையில் ஆணைக்குழுவின் விசாரணைகளும், அறிக்கைகளும் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இது தமிழ் மக்கள் மத்தியல் நம்பிக்கை இன்மையை தோற்றுவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net