பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்!

பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்கள்!

இந்தியாவில் 70 வது குடியரசு தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை முன்னிட்டு இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்பு கொடுத்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் சம்பிரதாய இராணுவ நிகழ்வுகளை இன்று நடத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையின் தளபதி எம்.கே.ஜவா, பாகிஸ்தானின் விமான படைத்தளபதி உஸ்மானுக்கு இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இனிப்புகள் அடங்கிய பெட்டிகளை வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் கொண்டாடப்படும் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகியவற்றின்போது எல்லையிலுள்ள பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகளை இந்திய இராணுவ வீரர்கள் பரிமாறி மகிழ்வது வழமையாகும்.

இதேவேளை இந்தியா முழுவதும் குடியரசு தின நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2302 Mukadu · All rights reserved · designed by Speed IT net