முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேருக்கு டெங்கு நோய்.

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேருக்கு டெங்கு நோய்.

முல்லைத்தீவு – தண்ணீரூற்று பகுதியை சேர்ந்த 27 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டு முதலாம் திகதி தொடக்கம் மாஞ்சோலை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளர்களில் 33 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளமை வைத்திய பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2018) முல்லைத்தீவு மாவட்டம் முழுவதுமாக மொத்தம் 101 பேர் மட்டுமே டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியதாக பிராந்திய சுகாதார பணிமனை தகவல்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், (2019) இவ்வாண்டின் 29 நாட்களில் 33 பேர் டெங்கு நோய் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 2313 Mukadu · All rights reserved · designed by Speed IT net