யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்!

யாழில் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில்!

யாழ். பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவரது வீட்டு முற்றத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் சடலம் இன்று காலை நுணாவில் மேற்கு சாவகச்சேரியில் மீட்க்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் கலைப்பீட 2 ஆம் வருடத்தில் கல்வி கற்ற சிறீதரன் கோகிலமதி என்ற 22 வயதுடைய மாணவியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த மாணவியின் காதலன் ஒரு மாதத்திற்கு முன்னர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மனவிரக்திக்கு உள்ளாகியிருந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net