உலக அமைதிக்கான இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு மகத்தானது!

உலக அமைதிக்கான இலங்கை இராணுவத்தின் பங்களிப்பு மகத்தானது!

உலக அமைத்திக்கான இலங்கை பாதுகாப்பு துறையினரின் பங்களிப்பானது நாட்டுக்கு கௌரவம் எனத் தெரிவித்த சபாநாயகர் கருஜய சூரிய ஐ.நா அமைதி காக்கும் படையில் இலங்கை தொடர்ந்தும் ஆக்க பூர்வமாக செயற்படும் எனவும் தெரிவித்தார்.

இதே வேளை, ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படைக்கு இலங்கையின் இராணுவம், வைத்தியர்கள் மற்றும் தாதியர்களை இணைத்துக்கொள்வதில் காப்படும் நடைமுறை தாமத நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து சபாநாயகர் கருஜய சூரிய தலைமையில் கலந்துரையாடப்பட்டது.

பாராளுமன்றத்தில் சபாநாயகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் ஐக்கிய நாடுகள் சகையில் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி தீபிகா உடகம மற்றும் பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள் இராணுவ அதிகாரிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மையில் மாலியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இறந்த இலங்கை இராணுவத்தை சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் தொடர்பாக இந்த கலந்துரையாடலில் கவனத்தில் கொள்ளப்பட்டதுடன் உலக அமைதிக்காக இலங்கை இராணுவம் ஐ.நா அமைதி படையில் இணைந்து செயற்படுகின்றமையானது நாட்டுக்கு பெறும் கௌரவம் என சபாநாயகர் இதன் போது தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net