குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டப்பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று(புதன்கிழமை) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கணவனும், மனைவியும் தங்களது மரக்கறி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே அவர்களை குளவி கொட்டியுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட கணவனும், மனைவியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தலவாக்கலை சின்ன கட்டுக்கலை தோட்டத்தைச் சேர்ந்த பழனியாண்டி சுப்பிரமணியம் (வயது – 72) என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net