திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக!

திருகோணமலை கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும் சடலமாக!

திருகோணமலையில் கடற்படையின் துப்பாக்கிச்சூட்டிற்கு பயந்து கடலில் குதித்த இரண்டாவது இளைஞனும், உயிரிழந்த நிலையில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரும் பிரதேச மக்களும் இணைந்து நேற்றிரவு முதல் நடத்திய தேடுதலில் குறித்த இளைஞனின் சடலம் இன்று (புதன்கிழமை) கிண்ணியா பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் தற்போது கிண்ணியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

மணற்கடத்தலில் ஈடுபட்டிருந்த சிலரைக் கண்ட கடற்படையினர், நேற்று பகல் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இதன்போது அச்சத்தில் மூவர் தப்பியோடினர். அப்போது ஒரு இளைஞனை கடற்படையினர் மடக்கிப் பிடித்தனர்.

இருவர் கடலில் குதித்த நிலையில், ஒருவரின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது.

இதேவேளை, மணற்கடத்தலில் ஈடுபட்ட 7 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டனர். அத்தோடு, மக்களின் கல்வீச்சில் 12 கடற்படையினர் காயமடைந்ததாக கடற்படையின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net