சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து!


சட்டவிரோதிகளின் அச்சுறுத்தல் பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இரத்து!

தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் விளைவால் ஏற்ப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய் வல்லுநர் போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ள துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் 30-01-2019 பாடசாலையில் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டிகள் இடம்பெற இருந்தது. அதக்கான ஏற்பாடுகள் (29) மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது பாடசாலைக்குள் புகுந்து குழுவென்றினால் மாணவன் ஒருவன் தாக்கப்பட்டதோடு, ஆசிரியர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.

இதனையடுத்து பொலீஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு இரவு பதினொரு மணிக்கு பாடசாலைக்கு பொலீஸார் வருகை தந்து ஆசிரியர்களை பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனால் நேற்று(30) காலை பாடசாலை முதல்வர் பெற்றோர்களை அழைத்து கலந்துரையாடியதோ, வலயக் கல்வித் திணைக்களத்துடனும் கலந்துரையாடி மாணவர்களின் பாதுகாப்பினை கருத்தில் எடுத்து நேற்று(30) இடம்பெறவிருந்த இல்ல மெய் வல்லுநர் போட்டிகளையும் இரத்துச் செய்துள்ளார்.

இல்லங்கள் அலங்கரிக்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் வினையாட்டுப் போட்டிகள் நிறுத்தப்பட்டமை மாணவர்களை மனதளவில் பாதித்திருக்கிறது.

மாணவனுக்கு அச்சுறுத்தல் ஏற்ப்பட்ட சந்தர்ப்பத்திலேயே உரிய தரப்பினர்கள் விரைந்து நடவடிக்கைகளில் இறங்கியிருந்தால் இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என சமூக ஆர்வலர்கள்குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்தோடு குறித்த சம்பவம் தொடர்பில் பொலீஸார் இதுவரைக்கும் மூன்று பெண்களை மாத்திரமே கைது செய்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net