மறைந்த பாரதத்தின் முன்னால் பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோவின் அஞ்சலி

மறைந்த பாரதத்தின் முன்னால் பாதுகாப்பமைச்சர் ஜோர்ஜ் பெர்னான்டோவின் அஞ்சலி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித் நிகழ்வு காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலமையில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பா.ம உறுப்பினர் சிறிதரன், முன்னால் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், மறைந்த பாரதத்தின் முன்னால் அமைச்சர் ஈழ விடுதலை போராட்டத்திற்கு ஆற்றிய ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.

இதேவேளை இவர் போன்று ஈழத்தில் படுகொலைகள் இடம்பெற்றபோது பல்வேறு தரப்பினர் ஆதரவாக செயற்பட்டனர்.

அரசியல் மாற்றத்தின் போது மாற்றம் பெற்றாலும், பலரது ஒத்தழைப்புக்கள் தொடர்ந்தும் இருந்தது. இந்திய நாட்டிற்கு தற்போது இலங்கை தமிழ் மக்களிற்கு உதவ வேண்டிய கடப்பாடு மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் போது தமிழர் தரப்பாக இந்தியாவே ஒப்பமிட்டது.

அத்துடன் இவர்களின் பணி முடிந்து போகவில்லை.

இன்றும் அவர்களிற்கு இலங்கையில் காணப்படும் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் என அனைவரும் தீர்வு வழங்குவது தொடர்பில் செயற்படவில்லை. பல அமைச்சர்கள் அபிவிருத்திதான் முக்கியம், அரசியல் தீர்வு இப்போது அவசியம் இல்லை என்பது போன்று செயற்படுகின்றனர்.

இந்த நிலையில் இந்தியா இலங்கை விடயத்தில் தலையீடு செய்து மக்களிற்கான தீர்வு விடயத்தில் பெற்று கொடுக்கவேண்டிய கடப்பாட்டில் உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net