காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே ? சனிக்கிழமை யாழில் போராட்டம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே ? சனிக்கிழமை யாழில் போராட்டம்.

எதிர்வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் காலை 10 மணி முதல் 11 மணி வரை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே? எனக் கேட்டுப் போராடும் உறவுகளுக்கு ஆதரவாக “மறைக்கப்படும் நீதியை வெளிப்படுத்தக் கோரி” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் கச்சேரி முன்னால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில், சமூகச் செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், யுவதிகள், ஊடகவியலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல்வாதிகள் என அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டுக் குழுவினர் பணிவுடன் அழைப்பு விடுத்துள்ளனர்.

அத்துடன் போராட்ட முடிவில் ஆளுநரிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

Copyright © 6507 Mukadu · All rights reserved · designed by Speed IT net