வவுனியாவிலுள்ள பெண்களே அவதானம் – அதிர்ச்சி தகவல்!

வவுனியாவிலுள்ள பெண்களே அவதானம் – அதிர்ச்சி தகவல்!

வவுனியாவிலுள்ள பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் துண்டுபிரசுரம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்டுள்ள துண்டுபிரசுரத்தில்,

அன்பான வவுனியா வாழ் பெண்களே!

வவுனியாவில் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் அனைத்து பெண்களினது பெயர்களும் பாதிப்படைகிறது.

புடவைக்கடைகள், ஆடம்பரப்பொருட்களுக்கான கடைகளுக்கு செல்லும் பெண்களே நீங்கள் உங்கள் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க செல்லுகிறீர்கள் பின் எதற்காக உங்கள் தொலைபேசி இலக்கங்களை கொடுத்து தேவையற்ற பிரச்சனைகளை ஏற்ப்படுத்துகிறீர்கள்? இதனால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டுமல்ல உங்கள் உறவுகளும் உங்களை சூழவுள்ளவர்களும் தான் பிரச்சனையில் அகப்படுகிறார்கள்.

இதனால் உங்கள் மானத்தையும், பணத்தையும் இழந்து இறுதியில் உயிரையும் விடும் நிலைக்கு தள்ளப்படுகிறீர்கள்.

எனவே இதனை கருத்தில் கொண்டு உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடும் பெண்களை அடையாளம் காணும் பட்சத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்வதோடு, குறிப்பாக கடைக்கு வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளே உங்கள் சொந்த தேவையின் நிமித்தம் நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள் எனவே, உங்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீங்கள் இவ்வாறான விடையங்களில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அகில இலங்கை தமிழர் மாகாசபை

வட மாகாண பெண்கள் அமைப்பு

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net