யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு

யாழில் வெட்டப்பட்ட குழியிலிருந்து வெடிபொருள் மீட்பு

யாழ்.கைதடியில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு முன்பாக வெட்டப்பட்ட குழியில் இருந்து வெடிபொருள் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நீர் விநியோகத்திற்கான குழாய் அமைக்க குழி வெட்டப்பட்ட போது அதற்குள் வெடிக்காத நிலையில் இருந்த செல் மீட்கப்பட்டது.

இது தொடர்பில் சாவகச்சேரி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் அதனை எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Copyright © 8891 Mukadu · All rights reserved · designed by Speed IT net