ஆளுநர் சுரேன் இராகவன் நிகழ்வில் ஊடகங்களுக்குத் தடை!

ஆளுநர் சுரேன் இராகவன் நிகழ்வில் ஊடகங்களுக்குத் தடை!

வடமாகாண ஆளுநா் சுரேன் ராகவன் முதல்தடவையாக மன்னாா் மாவட்டத்திற்று விஜயம் செய்துள்ள நிலையில் ஆளுநா் கலந்து கொண்ட நிகழ்விலிருந்து ஊடகவியலாளா்களை ஆளுநாின் செயலாளா் ஒருவா் வெளியேற்றியிருக்கின்றாா்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்டபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகள் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.

உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் செயலாளர்கள், மன்னார் ,நானாட்டான், முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகியவற்றின் பிரதேசச் செயலாளர் கள், மாவட்டத்தில் உள்ள கிராம அலுவர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணிக்கு வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் வருகை தருவதாக இருந்த போதும் நீண்ட நேரத்தின் பின்னரே அவரது வருகை அமைந்திருந்த நிலையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமானது.

இதன் போது மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களும் அங்கே சமூகமளித்திருந்தனர்.

அரசாங்க அதிபரின் ஆரம்ப உரை இடம்பெற்ற போது ஆளுனருடன் வருகை தந்த பிரத்தியேக செயலாளர் என கூறப்படுபவரினால் ஊடகவியலாளர்களை மண்டபத்தில்
இருந்து வெளியில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த செயலாளர் ஆளுனரின் பாதுகாப்பு பிரிவினரை வைத்து ஊடகவியலாளர்களை வெளியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதனால் ஊடகவியலளார்கள் அங்கிருந்து வெளியேறினர்.

வடமாகாண ஆளுனராக முன்னர் இருந்த ரெஜீனோல்ட் குரோயின் காலத்தில் ஊடகவியலாளர்களுக்கு இருந்த சுதந்திரம் தமிழராக தற்போது ஆளுனராக நியமிக்கப்பட்டவரின் காலத்தில் இல்லை என ஊடகவியலாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net