வவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி.

வவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி.

வவுனியாவில் கடந்த 40வருடங்களாக நடைபாதையில் வியாபாரம் மேற்கொண்ட வியாபாரி ஒருவர் இன்று காலை தனது வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முயன்றபோது உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவருகையில்,

வவுனியா இலுப்பையடி, தினச்சந்தைக்கு முன்னாலுள்ள சந்தை சுற்றுவட்ட வீதியில் நீண்டகாலதாக சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வியாபாரம் மேற்கொண்டுவரும் வியாபாரி இன்று காலை 6மணியளவில் கடை ஒன்றில் தேனீர் குடித்துவிட்டு தனது நடைபாதை வியாபார நடவடிக்கைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, தர்மலிங்கம் வீதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு முன்னால் சாய்ந்து இருந்த நிலையில் திடீரென்று கிழே வீழ்ந்துள்ளார்.

இதைக்கண்ட ஏனைய வியாபரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோதும் ஏற்கனவே எடுத்து வரும் வழியில் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்.

155ஆம் கட்டை இரணைமடு கிளிநொச்சியைச் 62 வயதுடைய நடைபாதை வியாபரியே இன்று காலை உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் ஆரம்ப விசாரணைகளின்போது மாரடைப்பினால் உயிரிழந்திருக்காலம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net