ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கண்ணிவெடி அகற்றும் பணி

கிளிநொச்சி முகமாலைப் பகுதியில் ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் சார்ப் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஜப்பானிய தூதரக அதிகாரிகள் சென்று பார்வையிட்டு கலந்துரையாடியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, வேம்பொடுகேணி, கிளாலி ஆகிய பகுதிகளில் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஜப்பானிய அரசின்நிதியுதவியுடன் மனித நேயக்கண்ணிவெடி அகற்றும் பிரிவான சார்ப் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை மேற்படி குழுவினர் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

இன்று பகல் (12-02-2019) 10.00 மணியளவில் வருகைதந்த மேற்படி குழுவினர் அதன் அலுவலகத்தில் சந்தித்துக்கலந்துரையாடியுள்ளதுடன், கண்ணிவெடி அகற்றும் பகுதிக்குச்சென்று அதனைப்பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net