இழுத்தடிக்கப்படும் கிளிநொச்சி விளையாட்டு மைதான பணிகள்?

இழுத்தடிக்கப்படும் கிளிநொச்சி விளையாட்டு மைதான பணிகள்?

தென்னிலங்கை அரசியல் குழறுபடிகளால் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளில் முடிவுறுத்த வேண்டிய விளையாட்டு மைதான நிர்மாணப்பணிகள் கடந்த 7 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகளிள் இடம்பெற்றுவருகின்றது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஓர் சர்வதேச விளையாட்டு மைதானம் 250 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படுவதாக மகிந்த அரசின் காலத்தில் பணி ஆரம்பிக்கப்பட்டது.

இதற்கான பணிக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கியபோதும் அதில் 109 மில்லியன் ரூபா மட்டுமே கிளிநொச்சிக்கு கிடைத்தது.

இதன் எஞ்சிய பணம் அப்போது இரகசியமாக அநுராதபுரம் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்கிற்கு திருப்பி விடப்பட்டது.

இதனிடையே பின்னராக பொறுப்பேற்றிருந்த நல்லாட்சி அரசு மஹிந்தவின் மைதானம் தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை.

அந்த நிலையில் அனுராதபுரத்திற்கு திருப்பிவிடப்பட்ட பணத்திற்காக கூலித்தொழிலாளர்களாக படையினர் இந்த கட்டுமானப் பணிகளின் மனிதவலுவை பயன்படுத்துவர் எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொழில் அனுபவமற்ற படையினரைக்கொண்டு வருடக்கணக்கில் கட்டுமானப்பணிகள் இழுத்தடிக்கப்படுவதாக தற்போது குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net