வடக்கு மாகாண ஆளுநருடன் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநருடன் ஐ.நா வதிவிடப்பிரதிநிதி சந்திப்பு

இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி ஹனாசிங்கருக்கும் வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பு நேற்று (13) பிற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.

வட மாகாணத்தில் நிலவும் காணி, வீடு மற்றும் இந்தியாவில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

வட மாகாணத்தில் பாதுகாப்பு படைகளிடமுள்ள பொதுமக்களின் காணிகள் மற்றும் விவசாயப் பண்ணைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் படிப்படியாக பொதுமக்களிடம் விடுவிக்கப்பட்டு வருவதால் வட மாகாணத்தில் ஏற்கனவே தேவையாகவுள்ள வீடுகளின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதால் அது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு இந்தியாவில் அகதிகளாக வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் உதவியையும் ஆளுநர் இதன்போது கோரினார்.

அத்தோடு வட மாகாணத்தில் ஐ.நா மேற்கொள்ளும் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு தனது நன்றியினை தெரிவித்த ஆளுநர், போருக்கு மோசமாக முகம் கொடுத்த மக்கள் வாழும் மாகாணமாக வடமாகாணம் காணப்படுவதால் இந்த மாகணத்தில் வாழும் மக்களை மோசமான பொருளாதார பாதிக்கப்பிலிருந்து வெளியே கொண்டு வரக்கூடிய செயற்திட்டங்களையும் முன்னெடுக்குமாறு ஐநாவின் வதிவிடப்பிரதிநிதியிடம் கோரிக்கையினை முன ்வைத்தார்.

இதன்போது கருந்துத் தெரிவித்த இலங்கைக்கான ஐநா வதிவிடப் பிரதிநிதி, வட மாகாண ஆளுநருடனான இந்த சந்திப்பு மிகுந்த ஆரோக்கியமாக அமைந்திருந்ததுடன்ஆளுநருடைய கோரிக்கைகள் தொடர்பில் அவதானத்தை செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

ஆளுநரின் செயலாளர் எல்.இளங்கோவன், வட மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன் ஆகியோரும்இந்தச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net