யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் சற்றுமுன்னர் சரமாரியாக கத்திக் குத்துக்கு இலக்காகிய ஆண் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கானவர் முதலில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உடனடியாக அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும் கத்திக்குத்து சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரை வெளியாகவில்லை. மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி போலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.