நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு.

நுண்கடனால் அவதியுறும் யாழ்.பெண்களுக்கு தீர்வு.

யாழ்ப்பாணத்தில் நுண்கடனால் அவதியுறும் பெண்கள் தலைமையிலான குடும்பங்கள் புதிய நுண்கடன் சட்டத்தினால் தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“நுண்கடன் திட்டத்தினால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும். ஆனால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட நுண்கடன் திட்டத்தினால் வறுமையான குடும்பத்திலுள்ள பெண்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகையால், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பதற்காகவே இப்புதிய நுண்கடன் சட்டத்தனை அறிமுகம் செய்யவுள்ளோம்.

மேலும், நுண்கடன் திட்டத்துக்குப் பதிலாக என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா அரச சலுகை வட்டி கடன் திட்டத்தில் மக்கள் இணைந்துக் கொள்வது சிறந்ததாகும்.

இந்த திட்டத்தில் மக்களுக்கென விசேட சலுகைகள் காணப்படுவதுடன் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிட்ட வங்கிகளுக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளோம்.

இதனால் எந்ததொரு வங்கியாவது சலுகையை வழங்க மறுத்தால், 1925 என்னும் இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு எமக்கு தெரிவிக்க முடியும்”என மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net