பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டு தற்கொலை.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் நேற்று வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உயர் தர வகுப்பு மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த மாணவன் வழமை போல் நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

மீண்டும் வீட்டிலிருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற குறித்த மாணவன் இரவாகியும் வீடு திரும்பவில்லையென தேடிய போதே குறித்த மாணவன் மணல் காடு பகுதியில் தூங்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அடம்பன் பொலிஸார் சடலத்தை மீட்டு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

குறித்த மாணவனின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net