குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!

குடிநீர் இன்றி அவதியுறும் இரணைதீவு மக்கள்!

மீள்குடியமர்த்தப்பட்ட இரணைதீவு மக்கள் குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தத்தின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விக கிராமமான இரனைதீவில் இருந்து கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

கடந்த வருடம் சித்திரை மாதம் கிளிநொச்சி இரணைமாத நகரில் இருந்து 200 க்கும் மேற்பட்ட படகுகளில் இரணைதீவு மக்கள் தங்கள் பூர்விக கிராமமான இரணைமாத நகருக்கு சென்றனர்.

யுத்தத்தின் காரணாமாக இரணைதீவு மக்கள் தங்களுடைய பூர்விகக் கிராமமான இரணைதீவில் இருந்து கடற்படையினரால் கட்டாயத்தின் பெயரில் அப்புறப்படுத்தப்பட்டு இரணை மாதா நகரில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்டு பல வருடங்கள் ஆகியும் தங்கள் பூர்விக கிராமமான இரணைதீவில் தாங்கள் குடியேற்றப்படவில்லை என தெரிவித்து பல நாட்கள் போராட்டத்தை மேற்கொண்டு இறுதியில் அரச அனுமதி இன்றி 200 படகுகளில் இரணைமாத நகரில் இருந்து இரணைதீவில் சென்று குடியேறினர்.

மீள்குடியேறி ஒரு வருடம் கடக்கப் போகின்ற நிலையில் இன்னும் குறித்த மக்கள் அரசாங்கம் மற்றும் அரச அதிகாரிகளால் பாரமுகமாக நடத்தப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அத்துடன், தங்கள் குடியேரிய பின்னரும் இதுவரை குடிநீர் வசதியோ போக்குவரத்து வசதியோ மருத்துவ வசதியோ அரசங்கத்தினால் செய்து தரப்படவில்லை என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்தில் அனைத்து கிணறுகளிலும் உள்ள தண்ணீர், உவர் தண்ணீராக காணப்படுவதனால் அதனை குடிக்க முடியாத நிலையில் தாங்கள் இருப்பதாகவும் , கடற்படையினரால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை குடும்பம் ஒன்றிற்கு 5 லீற்றர் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் முழுமையாக மின்சாரவசதி இல்லாமையால் இரவு நேரங்களில் தொழிலுக்கு செல்வதற்கும் இரவு நேரங்களில் நடமாடுவதும் ஆபத்தாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் எங்களுக்கு வீடுகளை அமைத்து தராவிட்டாலும் தங்களின் அடிப்படை தேவைகளையாவது பூர்த்தி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

Copyright © 8105 Mukadu · All rights reserved · designed by Speed IT net