முல்லைத்தீவில் பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவில் 200 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் அடியோடு சாய்ந்ததில் ஒருவர் படுகாயம்.

முல்லைத்தீவு – வட்டுவாகல் பிரதான வீதியில் இருந்த பழமை வாய்ந்த ஆலமரமொன்று இன்று அடியோடு சாய்ந்துள்ளது.

இதன்போது பிரதான வீதியின் அருகில் இருந்த தேசிய இளையோர் அணி அலுவலக காவல் நிலையமும் சேதமாகியுள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தால் இளையோர் அணி அலுவலக காவல் நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

200 வருடங்கள் பழமை வாய்ந்த குறித்த ஆலமரம் இன்று அதிகாலை அடியோடு சாய்ந்துள்ள நிலையில் தற்பொழுது வரை ஏ35 பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net