//anjeng பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி! | Mukadu

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!

பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது பலாலி விமான நிலையம் சம்பந்தமாக வெளியிட்ட கருத்து இதனை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாகவும் இதன் மூலம் யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியை சேர்ந்த மக்கள் தென்னிந்தியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என அமைச்சர் ரணதுங்க தெரிவித்திருந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வர அதிக நேரம் எடுக்கும் என்பதால், பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது அவர்களுக்கு உதவியாக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்டுள்ள ரஞ்சித் சொய்சா,

அமைச்சரின் கருத்தை ஆழமாக ஆராய்ந்தால், அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை புரிந்துக்கொள்ளலாம். பலாலி விமான நிலையத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அரசாங்கம் முயற்சித்து வருகிறது. இது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக மாறலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net