இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர்

இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் வட மாகாண ஆளுநர்

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித்சிங் சந்துக்கும் ,வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்குமிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான இந்தியா இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

வட மாகாணத்தில் இந்திய அரசாங்கம் நடைமுறைப்படுத்திவரும் செயற்றிட்டங்கள்மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பில் இச் சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது ஆராயப்பட்டது.

இதன்போது கருத்துத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர் தற்போது போலவே எதிர்காலத்திலும் தொடர்ச்சியாக இந்திய அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வட மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்படுமென உறுதியளித்தார்.

வட மாகாணத்தில் செயற்திட்டங்களையும் உதவித்திட்டங்களையும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திவரும் இந்திய அரசாங்கத்திற்கு ஆளுநர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சார்பிலும் அரசின் சார்பிலும்வட மாகாண மக்கள் சார்பிலும் தனது நன்றியினை தெரிவித்தார்.

அத்துடன் இந்த சந்திப்பினைநினைவுகூரும் வகையில் ஆளுநர் நாக மரக்கன்று ஒன்றினை உயர்ஸ்தானிகரிடம் வழங்கினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net