ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது!

ஒன்றரை கோடிக்கும் அதிக தங்கத்துடன் 9 பேர் கைது!

சுமார் மூன்று கிலோ தங்க நகைகள், மற்றும் தங்க பிஸ்கட்டுகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (19) பிற்பகல் துபாயிலிருந்து 4.20 மணியளவில் வந்த UL 303 மற்றும் சிங்கப்பூரில் இருந்து பிற்பகல் 4.50 மணியளவில் வந்த EK 654 ஆகிய இரு விமானங்களிலிருந்தும் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு வந்த குறித்த சந்தேகநபர்கள் 9 பேரிடமிருந்தும், சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக சுங்க திணைக்கள பதில் பேச்சாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்தார்.

சுமார் 3 கிலோ (2973.67 கிராம்) நிறை கொண்ட, ரூபா ஒரு கோடி 63 இலட்சத்து 44 ஆயிரத்து 179 (ரூ.16,344,179) பெறுமதியான பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சந்தேகநபர்கள் மருதானை, நீர்கொழும்பு, சீதுவை, சிலாபம், கண்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net