சமரசம் செய்ய விரும்பாத ஊடகவியலாளர்! பொலிஸ் அதிகாரி கைது!

சமரசம் செய்ய விரும்பாத ஊடகவியலாளர்! பொலிஸ் அதிகாரி கைது!

யாழில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ்அதிகாரியை பொலிஸார் இன்றையதினம் கைது செய்துள்ளனர்.

யாழ். கொக்குவில், கருவேப்புலம் வீதியில் வீடொன்றின் மீது ஆவாக் குழுவினரால் நேற்று பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் செய்தியை சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளரை தாக்கிய பொலிஸ் அதிகாரியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரிடம் பொலிஸார் விசாரணைக்கு சென்று சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது ஊடகவியலாளர் பொலிஸாருடன் சமரசம் செய்ய விரும்பவில்லை. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொண்ட பொலிஸாரை கைது செய்து, நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளார்.

இதன்போது குறித்த பொலிஸ் அதிகாரி கடுமையான தொனியில் ஊடகவியலாளரை அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், ஊடகவியலாளர் எதிர்காலத்தில் இதேபோல் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படுமென்று தெரிவித்தற்கு அமைய யாழ்.பொலிஸார் குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.

குணரத்தின என்ற பொலிஸ் பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net