தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்!

தண்ணீரூற்று குமுழமுனைக்கு பள்ளந்திட்டியில் பயணம்!

தண்ணீரூற்று குமுளமுனை பிரதான வீதி நீண்டகாலமாக குன்றும் குழியுமாக காணப்படுகிறது.

இவ் வீதியானது தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தற்பொழுதைவிட நன்றாகவே இருந்தது,

யுத்தம் முடிவடைந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அவ்வீதி செப்பனிடப்படாது காணப்படுவதுடன் மழை காலங்களில் கணுக்கேணிக்குளம் என்ற பெயரில் உள்ள முறிப்பு குளத்தின் நீர்மட்டம் உயர்வடைந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் இரண்டு அடிக்கு மேலாக வீதியினை மேவி நீர் பாய்ந்து அடித்துச் செல்லப்பட்ட நிலையில் வீதி பாவனைக்கு உதவாத நிலையில் காணப்படுகிறது,

கடந்த பருவமழைக்கு முன்னர் 15 மீற்றர் தூரத்துக்கு வெறுமனே ஒரு ரிப்பர் கிரவலை பெயரளவில் தூவி மேற்கொள்ளப்பட்ட கண்துடைப்பு அபிவிருத்தியால் காணப்பட்ட நிலையிலும் பார்க்க மோசமான நிலையில் காணப்படுகிறது!

வடக்கின் வசந்தம் போன்ற பாரிய திட்டங்கள் பல காணப்பட்டபோதிலும்,
எந்தவொரு வேலைத்திட்டங்களும் மேற்கொள்ளப்படாது காணப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net