புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்?

விடுதலைப் புலிகளை அழித்த போது உலகமே இலங்கையை பாராட்டியது! புலவாமா தக்குதலுக்கு மோடி அரசு ஏன் மௌனம்?

புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று சிவசேனை கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்காவையோ மேற்குலக நாடுகளையோ இந்தியா சார்ந்திருக்கக் கூடாது என்றும் மத்திய அரசை அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

சிவசேனை கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இன்று வெளியான தலையங்கத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பாதுகாப்புப் படை வீரர்களின் வீர மரணத்தில் அரசியல் செய்வது, தேர்தல் தந்திரமாகி விட்டது.

அரசியல்வாதிகள் இப்படி நடந்துகொண்டால், எதிரிகளை எவ்வாறு எதிர்கொள்வர்? புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

பாகிஸ்தானுக்கு மத்திய அரசு வெறும் எச்சரிக்கைகளை மட்டுமே விடுத்துவருகிறது. பதான்கோட் தாக்குதல், உரி தாக்குதல் என அனைத்து பயங்கரவாதத் தாக்குதலுக்கும் இதே நிலைப்பாட்டையே மத்திய அரசு கொண்டுள்ளது. அவற்றைக் கைவிட்டு பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து அமெரிக்கா, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட நாடுகள் என்ன சொல்லப் போகின்றன? என்பதை எதிர்பார்த்துக் காத்திருந்தே நாம் முதுகில் குத்தப்பட்டுள்ளோம்.

அத்தகைய நாடுகளின் உதவிகளைச் சார்ந்திருக்காமல், இந்த விவகாரத்தில் தன்னிச்சையாக நாம் முடிவெடுக்க வேண்டும்.

தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பினரை இலங்கை அரசு ஒடுக்கியது. இதற்காக உலக நாடுகள் அனைத்தும் இலங்கையைப் பாராட்டின. பாகிஸ்தானுக்குள் புகுந்து ஒசாமா பின் லேடனை அமெரிக்கா கொன்றது.

அமெரிக்காவின் வீரத்தை உலகமே புகழ்ந்து பேசியது. ஆனால், நமக்குப் பல்வேறு தொல்லைகளை பாகிஸ்தான் ஏற்படுத்திய பிறகும், நாம் அமைதியாகவே இருக்கிறோம்.

புல்வாமா தாக்குதலைக் கண்டிப்பதாலோ, இந்தியாவின் ஒரு பகுதி தான் காஷ்மீர் என்று அமெரிக்காவோ, பிரான்ஸ் கூறுவதாலோ எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

இந்தியாவுக்குத் தொந்தரவு ஏற்படுத்தினால், உங்களுக்குத் தான் சேதாரம் ஏற்படும் என்று பாகிஸ்தானை அந்நாடுகள் கண்டிக்காதவரை, அவை இந்தியாவின் உண்மையான நட்பு நாடுகள் இல்லை” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net