ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்!

ஜெனிவா விவகாரம் – வடக்கில் புலனாய்வு செயற்பாடுகள் தீவிரம்!

தமிழர் தாயகத்தின் வடக்கு பகுதியில் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.

ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் செய்பவர்களை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

வடக்கு கிழக்கு உள்ளிட்ட எட்டு மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் பேராட்டங்களில் ஈடுபடும் போராட்டகாரர்களின் நடவடிக்கை தொடர்பிலும் அவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் நிலமீட்பு போராட்டம் மற்றும் அரசியல் போராட்டங்களை யார் யார் எங்க முன்னெடுக்கின்றார்கள் என்ற விடையங்களை சேகரிக்கும் நடவடிக்கையிலும் புலனாய்வாளர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறிப்பாக வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மேற்கொள்ளும் ஊடக சந்திப்புக்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் சந்திப்புக்கள் என்பனவற்றை கண்காணிப்பதுடன் அவற்றை ஒளிப்படம் எடுக்கும் நடவடிக்கையிலும் புலனாய்வாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

ஜ.நா மனிதஉரிமை கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளை தாயகத்தில் மக்கள் தன்நெழுச்சியாக மேற்கொள்ளவிடாது மறைமுக அச்சுறுத்தல்களை கொடுக்கும் நடவடிக்கையில் படை புலனாய்வாளர்கள்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net