பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தன்.

பாகிஸ்தானிடம் சிக்கியுள்ள அபிநந்தன்.

இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்திடம் சிக்கியுள்ளார்.

பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று காலை புகுந்த மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்து காணாமல் போயுள்ளது.

இதன் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் தற்போது பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்திய தரப்பு அவரை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிக் 21 ரக போர் விமானத்தை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாக இந்தியா உறுதிப்படுத்தியுள்ளது. அதேபோல் அபிநந்தன் காணாமல் போனதையும் இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது.

அபிநந்தன் பாகிஸ்தானில் இருந்தால், ஐ.நாவில் கூறி இது குறித்து முறையிடப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

அபிநந்தன் திருவண்ணாமலையை சேர்ந்த விங் கமாண்டர் விமானி ஆவார்.

இவரின் அப்பாவின் பெயர் வர்த்தமான். அவரும் ஏர்மார்ஷலாக இருந்தார். 2004ஆம் ஆண்டு முதல் இந்திய விமானப்படையில் இணைந்து சேவையாற்றி வருகிறார் அபிநந்தன், என்று விவரங்கள் வெளியாகி உள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net