பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா!

பாகிஸ்தானுடன் போருக்கு தயாராகும் இந்தியா! கசிந்தது முக்கிய ஆதாரம்!

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்தியாவுக்கு சொந்தமான காஷ்மீர் வைத்தியசாலைகளின் மீது அவசரமாக செஞ்சிலுவை சின்னம் வரையப்பட்டு வருவதாக போர் ஏற்படும் ஆபத்து நெருங்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீா் ரஜோரியில் பாகிஸ்தான் போர் விமானம் அத்துமீறி நுழைந்ததால் இந்தியப் பாதுகாப்பு படை பாகிஸ்தான் விமானத்தை சுட்டுத் தள்ளியது.

இதனைத் தொடா்ந்து பாகிஸ்தானில் உள்நாட்டு,வெளிநாட்டு விமான சேவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் இராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹிரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளையும் அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டன.

பரபரப்பான சூழ்நிலையில் பாகிஸ்தான் பிடியில் இந்திய விமானி அபி நந்தன் என்பவர் சிக்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவரை மீட்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சருடன் முப்படை தளபதிகளும், பிரதமா் மோடியுடன் தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலும் சந்தித்து பேசினர். போர் பதற்றம் நிலவி வருவதைத் தொடர்ந்து இரு நாட்டு இராணுவ நிலைகளும் தயாராக உள்ளன.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள அனைத்து வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் வைத்தியசாலைகளில் 24 மணி நேரமும் செயல்படுவதை குறிக்கும் விதமாக வைத்தியசாலைகளின் மேற்தளத்தில் செஞ்சிலுவை சங்கத்தின் ரெட் கிராஸ் சின்னம் வரையப்பட்டுள்ளது.

இந்த சின்னம் வரைபின் பின்னணியில் போர் ஒன்றுக்கு இந்தியா தயாராகி வருவதை உறுதிப்படுத்துவதாக அந்நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net