முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

முல்லைத்தீவில் கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் பலி!

முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு வவுனிக்குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் கட்டுத் துப்பாக்கியில் சிக்கி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

மாந்தை கிழக்கு வவுனிக்குளம் அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய சுரேஷ்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது வீட்டிற்கு பின்புறமாகவுள்ள வவுனிக்குளம் பகுதியில் தூணடிலில் மீன்பிடிப்பதற்காகச் சென்ற சமயம் கட்டப்பட்டிருந்த கட்டுத்துவக்கு வெடித்ததில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.

இதனை வெடிச்சத்தம் கேட்ட பகுதிக்கு சென்ற கிராம வாசிகள் குறித்த நபர் இரத்த வெள்ளத்தில் தோய்ந்திருப்பதை அவதானித்தவுடன் அவரை உடனடியாக மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net