இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்! முடங்கிய விமான சேவைகள்!

இந்தியா- பாகிஸ்தான் வான் பகுதியில் பதற்றம்! முடங்கிய விமான சேவைகள்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களால் இந்திய விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய விமான படையினர் நேற்று அதிகாலை பாகிஸ்தானுக்கு உரிய பதிலடி கொடுத்தனர்.

இதனால் பாகிஸ்தான் அச்சம் கொண்டு இந்தியாவை தாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

எனினும் இந்த நடவடிக்கைகளை இந்திய முறியடித்து வருவதுடன் இன்று பாகிஸ்தானிலிருந்து ஊடுருவிய அந்நாட்டு போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதனால் தொடர்ந்து எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அமிருதசரஸ் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.

இதே போல் பாகிஸ்தானிலும் உள்நாட்டு, சர்வதேச விமான சேவைகளை லாகூர், முல்தான், ஃபைசலாபாத், சியால்கோட், இஸ்லாமாபாத் ஆகிய இடங்களிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் வான் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில விமானங்கள் வருகின்றன. பல விமானங்கள் மாற்று பாதையை நோக்கி செல்கின்றன என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Copyright © 9698 Mukadu · All rights reserved · designed by Speed IT net