அபிநந்தன், தாய் நாட்டின் இரகசியம் குறித்து பேச மறுத்துள்ளார்!

அபிநந்தன், தாய் நாட்டின் இரகசியம் குறித்து பேச மறுத்துள்ளார்!

பாகிஸ்தான் இராணுவத்தின் பிடியில் இருக்கும் இந்திய விமானப்படையை சேர்ந்த அபிநந்தன், தாய் நாட்டின் இரகசியம் குறித்து பேச மறுத்துள்ளமைக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்த மிக் 21 ரக விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதன் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் அந்நாட்டு இராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டார்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அபிநந்தனிடம் பாகிஸ்தான் இராணுவத்தினர் விசாரணைகள் மேற்கொண்டுள்ளனர்.

இதன் போது அபிநந்தன் மிகவும் தைரியமாகவும் துணிச்சலாகவும் பதில் வழங்கியுள்ளார்.

இது குறித்த காணொளி தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இதன் போது பதில் வழங்கிக அபிநந்தன், தனது பெயர் விபரங்களை பாகிஸ்தான் இராணுவத்திடம் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

“கண்டிப்பாக நன்றாக என்னை கவனித்தீர்கள். நான் இந்தியா திரும்பினாலும் நான் என்னுடைய இந்த பதிலை மாற்ற மாட்டேன்.

பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் என்னை அந்த கும்பலிடம் இருந்து மீட்டனர். என்னை பாதுகாப்பாக அழைத்து வந்து உரிய மரியாதை கொடுத்த அனைவருக்கும் நன்றி.

இதே போன்று தான் எங்களுடைய இந்திய இராணுவமும் உங்களை மரியாதையோடு நடத்தி இருக்கும்” என்று கூறினார்.

எனினும், இந்திய இராணுவம் குறித்த சில முக்கிய கேள்விகளுக்கு அவர் பதில் வழங்க மறுத்துள்ளார். இந்நிலையில், அபிநந்தனுக்கு பல தரப்பினர்களும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net