போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடு!

இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடு!

இந்தியாவில் ஏற்பட்ட போர் பதற்றத்தின் பின்னணியில் இந்திய பிரதமரின் தேர்தல் செயற்பாடுகளே அமைந்திருந்ததாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போது பிரதமர் இம்ரான் கான் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா மீது போர் தொடுக்க வேண்டிய அவசியம் என்றும் பாகிஸ்தானுக்கு இருந்தது இல்லை.

தேர்தல் வரும் சமயங்களில் இரு நாட்டு அரசியல்வாதிகளும் தங்களின் அரசியல் தேவைகளுக்காக போர் பதற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

முன்னர் பாகிஸ்தான் பிரதமர் முஷாரப்பும் இதேபோன்ற நடைமுறையை கையாண்டார். இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி முயற்சி செய்கின்றார்.

போர் ஏற்படும் பதற்றமான சூழ்நிலையில் ஒரு நாட்டுத் தலைவர் இராணுவ உயர்மட்டத்தினரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்துவார். ஆனால் இந்தியப் பிரதமர் வாக்காளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் எனத் பிரதமர் தெரிவித்தார்.

தற்போதைய நிலையில் இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் ஏற்படவிருந்த பாரிய முறுகல் நிலை தணிந்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமரின் செயற்பாடு காரணமாக போர் ஏற்படும் அபாயம் தவிர்க்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் அனைத்து ஆயத்த நடவடிக்கைகளிலும் இந்தியா தீவிரமாக ஈடுபட்டிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தியாவின் எல்லையோரங்களிலுள்ள முக்கிய தளங்களுக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி தாக்குதல் நடத்திய இந்திய விமானங்களை பாகிஸ்தான் இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். அதில் பரசூட் மூலம் தப்பித்துக் கொண்ட விங் கொமாண்டர் அபினந்தனை பாகிஸ்தான் இராணுவத்தினர் கைது செய்திருந்தனர்.

இந்திய விமானி சிறை பிடிக்கப்பட்டமை இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. போர் ஏற்படுவதற்கான ஆரம்ப நிலையாக இது அமைந்திருந்தத.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட விமானியை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் பிரதமர் நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர் ஏற்படும் அபாயம் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net