அபிநந்தனிற்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து

அபிநந்தனிற்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் வாழ்த்து
பிரபலங்களின் வாழ்த்துக்களினால் ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நடந்த விமான தாக்குதலில் இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அபிநந்தன் பிடிபட்டதில் தொடங்கி, விடுவிக்கப்பட்டது வரை ட்விட்டர் தளத்தில் அவருடைய பெயர் #Abhinandan ட்ரெண்ட்டாகி கொண்டே இருந்தது.

இந்திய திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள், முதல்வர்கள், ஆளுநர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலரும் #WelcomeHomeAbhinandan என்ற ஹேஷ்டேக்கில் தங்களுடைய வாழ்த்தை பகிர்ந்த வண்ணமுள்ளனர்.

அவற்றின் தொகுப்பு இதோ:

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி : இந்தியாவின் நாயகன் வீடு திரும்புகிறார். இந்த தேசம் அவரை, அவர் குடும்பத்தை, இந்திய விமானப் படையை, இந்தியாவின் தலைமையை மற்றும் இந்திய அரசை மொத்தமாக வணங்குகிறது.

பஞ்சாப் முதல்வர் அமிரிந்தர் சிங் : அபிநந்தன் வர்த்தமானை முழுமனதாக வரவேற்கிறேன். நேரே சென்று அவரை வரவேற்பதை நான் விரும்பினாலும் பாதுகாப்பு காரணங்களால் என்னால் போக முடியவில்லை. உங்களை விரைவில் சந்திப்பேன் என நம்புகிறேன் ஆபிசர். #WelcomeHomeAbhinandan

அகிலேஷ் யாதவ் : விங்க் கமாண்டர் அபிநந்தன் அவர்களை தாயகத்துக்கு வரவேற்பதை எதிர்நோக்கியுள்ளேன். தைரியமான நமது தியாகிகள் மற்றும் குடும்பங்களின் தியாகங்களை நம்மால் மறக்கவே முடியாது. உள்நாட்டில் வளர்ந்த தீவிரவாத அமைப்புகளை களைவதை பாகிஸ்தான் பேச்சிலிருந்து செயலுக்குக் கொண்டு வர வேண்டும். அமைதி நிலவும் என நம்புகிறேன்.

முகமது கைஃப் : #WelcomeHomeAbhinandan கடினமான சூழலில் கண்ணியத்துடன், நயத்துடன், தைரியமாக நீங்கள் நடந்துகொண்டது பெருமையாக உள்ளது. நீங்கள் வீடு திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி.

வீரேந்தர் சேவாக் : நீங்கள் எங்களுடன் இருப்பதில் எங்களுக்கு எவ்வளவு பெருமை தெரியுமா. உங்கள் திறமைகளை வணங்குகிறேன். உங்கள் வலிமை மற்றும் தைரியத்துக்கும். #WelcomeBackAbhinandan . நாங்கள் உங்களை நேசிக்கிறோம். உங்களால் எங்களுக்குள் பெருமை நிறைந்துள்ளது. #WeAreSupposedToTellYouThis

வி.வி.எஸ்.லட்சுமண் : ஒட்டுமொத்த தேசமும் உங்கள் சுயநலமின்மை, தைரியம் மன உறுதியால் பெருமைகொண்டுள்ளது. #WelcomeHomeAbhinandan

ரிஷப் பந்த் : வரவேற்கிறோம் அபிநந்தன் அவர்களே. நம் தேசம் மொத்தமும் உங்கள் சுயநலமின்மை மற்றும் மனதைரியத்தைக் கண்டு பெருமைபடுகிறது. உங்களை வணங்குகிறோம். ஜெய்ஹிந்த். #WelcomeHomeAbhinandan

ப்ரீத்தி ஜிந்தா : 65 வருட பழைய ரஷ்யாவின் மிக்21 விமானம், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்ட எஃப்15 விமானத்தை இந்தியா பாக் எல்லையில் சுட்டு வீழ்த்தியதைக் கண்டு அமெரிக்க மக்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். இது விமானி பயிற்சியைப் பற்றி நிறைய சொல்கிறது. சிறந்த விமானி ஓட்டுவதுதான் சிறந்த விமானம். #WelcomeHomeAbhinandan #RealHero #IndianAirForce #JaiHind

தமன்னா : உங்கள் அமைதி மற்றும் பொறுமைக்கு தலை வணங்குகிறோம் அபிநந்தன். நீங்கள் எப்போதும் தைரியமாக இருந்தீர்கள். #WelcomeHomeAbhinandan

ஹன்சிகா : இந்த மனிதரின் மன தைரியத்துக்காக தலை வணங்குங்கள். #WelcomeHomeAbhinandan

பிரகாஷ்ராஜ் : #WelcomeHomeAbhinandan #Abhinandancomingback. அரசியல்வாதிகள் அரசியலாக்கட்டும். ஊடகங்களை கூரைக்கு மேல் ஏறி நின்று அலறட்டும். ஆனால் குடிமக்களாக நாம் ஒற்றுமையுடன் நின்று நமது நாயகனை வரவேற்போம்.

ப்ரித்விராஜ் : இந்த தேநீர் அற்புதமாக உள்ளது. ஆனால் நான் அதை உங்களிடம் சொல்ல முடியாது. மீண்டும் வருக சார். ஜெய்ஹிந்த்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net