4 மணி நேரம் இழுத்தடிப்பின் பின் அபிநந்தன் விடுதலை!

4 மணி நேரம் இழுத்தடிப்பின் பின் அபிநந்தன் விடுதலை!

பாகிஸ்தான் இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்தவரும் இந்திய விமானப்படை வீரருமான அபிநந்தன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்திய விமானியான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். பாகிஸ்தான் வசமுள்ள வீரர் அபிநந்தனை இந்தியாவிற்கு திரும்ப கொண்டுவர பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்த நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவரை இன்று விடுவிப்பதாக அறிவித்தார்.

இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் மாலை 5.20 மணிக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இரவு 9.20 மணிவரை பாகிஸ்தான் வேண்டுமென்றே இழுத்தடித்து அதன்பிறகே, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், இன்று மாலை, லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். வாகா எல்லைக்கு மாலை 5.20 மணியளவில் அபிநந்தன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அபிநந்தனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்திருந்தனர்.

மேளம், தாளம் முழங்க அவர்கள் நடனமாடி அபிநந்தனை வரவேற்க காத்திருந்தனர். அபிநந்தன் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை அவர்கள் கொண்டு வந்திருந்தனர்.

இந்திய கொடிகளை அசைத்து வாழ்க கோஷமிட்டனர். ஆனால், இந்திய மக்களின் ஹீரோவான அபிநந்தனை யார் முன்னிலையிலும் அழைத்துவரவில்லை.

எனவே, அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் ஏமாற்றமடைந்தனர். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எங்கே அபிநந்தன், எங்கே என மக்கள் தேடினர்.

பாகிஸ்தானினால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய விமானி எல்லையை வந்தடைந்துள்ள நிலையில் பட்டாசு கொளுத்தி இனிப்பு பண்டம் பரிமாறி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.

அபிநந்தனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய பொதுமக்கள் வாகா எல்லை பகுதியில் குவிந்திருந்ததுடன் மேளம், தாளம் முழங்க அவர்கள் நடனமாடி அபிநந்தனை வரவேற்றனர்.

4 மணி நேரம் இழுத்தடித்து அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்த பாகிஸ்தான்

இந்திய அதிகாரிகளிடம் விங் கமாண்டர் அபிநந்தன் மாலை 5.20 மணிக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இரவு 9.20 மணிவரை பாகிஸ்தான் வேண்டுமென்றே இழுத்தடித்து அதன்பிறகே, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட இந்திய விங் கமாண்டர் அபிநந்தன், இன்று மாலை, லாகூரிலிருந்து கார் மூலமாக வாகா எல்லைக்கு அழைத்து வரப்பட்டார். வாகா எல்லைக்கு மாலை 5.20 மணியளவில் அபிநந்தன் அழைத்து வரப்பட்டிருந்தார்.

அபிநந்தனை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான இந்திய பொதுமக்கள் எல்லை பகுதியில் குவிந்திருந்தனர்.

மேளம், தாளம் முழங்க அவர்கள் நடனமாடி அபிநந்தனை வரவேற்க காத்திருந்தனர். அபிநந்தன் புகைப்படங்களுடன் கூடிய போஸ்டர்களை அவர்கள் கொண்டு வந்திருந்தனர். இந்திய கொடிகளை அசைத்து வாழ்க கோஷமிட்டனர்.

ஆனால், இந்திய மக்களின் ஹீரோவான அபிநந்தனை யார் முன்னிலையிலும் அழைத்துவரவில்லை. எனவே, அவரை பார்க்க முடியாத ஏமாற்றத்தில் மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. எங்கே அபிநந்தன், எங்கே என மக்கள் தேடினர்.

ஆனால் இரவு 9.20 மணிவரை வரை அபிநந்தன் முகத்தை எந்த மீடியாவாலும் காண்பிக்க முடியவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்பதை இரு நாட்டு அரசுகளும் முறையாக அறிவிக்கவில்லை.

இந்தியாவிடம் ஒப்படைக்கும் கால நேரத்தில், 2 முறை பாகிஸ்தான் மாற்றியதாக கூறப்படுகிறது. இந்திய வீரரை ஒப்படைக்க இழுத்தடித்து பாகிஸ்தான் வேடிக்கை காட்டியதக வாகா எல்லையில் கொந்தளிப்பான சூழல் உருவானது.

இந்த நிலையில், இரவு 9.20 மணிக்கு வாகா எல்லை வழியாக அபிநந்தன் அழைத்து வரப்பட்டு இந்திய எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டாார்.

அவரை பார்த்த பொதுமக்கள் வாழ்க.. வாழ்க.. என்று கோஷமிட்டனர். இதையடுத்து அபிநந்தன், அமிர்தசரசுக்கு காரில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து, விமானத்தின் மூலம், டெல்லி பயணிக்க உள்ளார் அபிநந்தன்.

Copyright © 5323 Mukadu · All rights reserved · designed by Speed IT net