உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன!

உற்பத்தி செய்யக்கூடிய வளமிருந்தும் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன!

மூலப்பொருட்களைக்கொண்டு முடிவுப்பொருட்கள் ஆக்கக்கூடிய அனைத்து வளங்களும் வடக்கில் இருந்தும் அவை, தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.

பால் மற்றும் நெல் உற்பத்தியின் மூலப்பொருட்களே இவ்வாறு வடக்கிலிருந்து தென் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 2000 புதிய ஏற்றுமதியாளர்களை உருவாக்கும் செயற்திட்டம் வன்னி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை வன்னி மாவட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்காக அங்குரார்ப்பண நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“தொழிலாளர்களை உருவாக்கக்கூடிய தொழிற்சாலைகள் வடக்கிலும் உருவாக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் அனைத்து பாகங்களிலும் சம அளவான அபிவிருத்தியைப் பெற முடியும்.

அத்தோடு பெண்களை மையப்படுத்திய தொழிற்சாலைகள் அமைக்கப்பட வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net