சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகத்தினர் சிறீதரன் எம்.பியை சந்தித்தனர்!

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டு கழகத்தினர் சிறீதரன் எம்.பியை சந்தித்தனர்!

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு நேற்று கிளிநொச்சி சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களது கோரிக்கைக்கமைவாக இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமது விளையாட்டுக்கழகத்தின் தேவைகள் தொடர்பிலும், தமது கிராமத்தின் தேவைகள் குறித்தும் எடுத்துக்கூறி அவற்றைப் நிவர்த்தி செய்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

சாந்தபுரம் கலைமகள் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சத்தியசீலன் தலைமையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மேலும் அவர்கள் கூறுகையில்,

சாந்தபுரம் கிராமத்திற்குரிய வீதிகளைப் புனரமைப்புச் செய்வதற்கு உதவுமாறும் கோரியிருந்தனர், முதியோர் சங்கத்தில் தமது சங்கத்திற்குக் கட்டட வசதி மற்றும் சங்கச் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு நிதி வள உதவிகளையும் கோரியிருந்தனர்.

தொடர்ந்தும் இவர்களது கோரிக்கைக்கு தீர்வாக, மே மாதம் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

மற்றும் கிராமத்தின் சிறு வீதிகளைத் திருத்துவதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன எனவும் கூறினார்.

மேலும் சாந்தபுரம் முதியோர் சங்கத்தினரது கோரிக்கைகளுக்கமைவாக அவர்கள் தமது சங்கத்தை நடத்திச் செல்வதற்குரிய வளங்களைப் பெறக்கூடிய வகையில் நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் கரைச்சிப் பிரதேச சபையின் உபதவிசாளர் சி.தவபாலன், தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக்கான செயலாளர் விஜயன், கட்சியின் செயற்பாட்டாளர்கள், சாந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் நாகேந்திரகுமார் விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net